அடுத்த 3 மாதத்திற்கு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 80 கோடி மக்களுக்கு 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள்-மத்திய அரசு


80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசம்,கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.                                                                                        இன்று நடை பெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் - திரு.நிர்மலாசீதாராமன் மற்றும் இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் வழங்கிய பல்வேறு முக்கிய அறிவிப்புகள்:


கொரோனாவுக்கு எதிராக போரிடும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு மருத்துவ காப்பீடு


80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும்


ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடுத்த 3 மாதத்திற்கு தலா 1 கிலோ பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும்


விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், விதவைகளுக்கு நேரடியாக பண உதவி செய்யப்படும்


விவசாயிகள் முதற்கட்டமாக தலா 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்குகளில் பெறுவர்


சுமார் 8.7 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்


ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் ஐந்து கோடி பேருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்


மூத்தகுடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்


வங்கிகளில் ஜன்தன் கணக்குகள் வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும்


உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற பெண்களுக்கு தலா 3 சிலிண்டர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்


தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் தலா 12 சதவீத இபிஎஃப் தொகையை மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்கு செலுத்தும்


100 தொழிலாளர்களுக்கு கீழ் பணியாற்றும் நிறுவனங்கள், தொழிலாளர்கள் சார்பில் தலா 12% இபிஎஃப் தொகையை மத்திய அரசு 3 மாதங்களுக்கு செலுத்தும்


தொழிலாளர்கள் பிஎஃப் பணத்தில் 75சதவீதம் அல்லது 3 மாத ஊதியம், இவற்றில் எது குறைவோ அதை பெற்றுக் கொள்ளலாம்